மக்கா கன்னுகுட்டி எல்லாம்

மக்கா கன்னுகுட்டி எல்லாம்
ஃப்ளாக் போட்டால் தமிழ் என்னாகும்?

Saturday, October 15, 2011

பஸ் ஸ்டாண்ட் எவ்வளவு..?

ஐயோ சும்மா சும்மா மிரட்றாங்லே.தாங்க முடியல அப்பு.!!
நான் மெத்த படித்த மேதாவி(மேல்தாவி இல்லை மேதாவிங்க)என்பது உலகம் அறிந்த ஒன்று.
ஒரு சமயம் நான் வேலை பார்த்த (ஆமாங்க அப்பபப சிலசமயம் வேலை பார்த்ததுண்டு) நிறுவனத்தின் டேமேஜர் என்னை அப்பா உன்னைபோல் உண்மை உழைப்பாளி யாருளர்,(நான்-மேதாவி அல்லவா-இதை வஞச புகழ்ச்சி என் அறியவில்லை-டேமேஜர்கள் அனைவரும் அப்படித்தான் பேசுவர் போலும்)நீ பேங்கலூர் /மைஸூர் சென்று இந்த வேலையை முடித்துவா என {என் ஸூபர்வைஸர் வேண்டாம் இந்த விபரீதம் -இருகிறதயும் கெடுத்து வைப்பான் என் தடுத்தும்} அதையும் மீறீஏவினார்.
நானும் பேங்கலூரை ஒரு வழி பன்னிவிட்டு(ஏன் பன்னிவிட்டாய்,ஆடு/மாடு விடலை என குறுக்கு கேள்வி கேட்க கூடாது)மைசூரை சென்று அங்கும் Hootagalli Ind. estate ஐ ஒரு வழிசெய்து விட்டு திரும்ப மைஸூ ர் பஸ் ஸ்டாண்டை அடைய கன்னடம் தெரிந்த தமிழ் நண்பர் சொற்படி முயற்சி ஸெய்தேன்.{போன வேலை என்னாச்சு என கேட்க கூடாது-அது அடுத்த கதையாக வரும்-கட்டாயம் வரும்-விடுவதாக இல்லை}நான் வ்ழிதடம் விசாரித்த அனைவரும் என்மேல் கோபம் கொண்ட பார்வை ஓன்றை வீசி விட்டு சென்றனர்.
கடைசியாக நண்பரிடம் ஃபோன் போட்டு வழி கேட்டேன்.அவர் தன் கன்னட நண்பர் ஒருவரை அனுப்பினார் .நண்பரின் நண்பரும் (இன்னும்உங்களுக்கு தலை சுத்தலயா-சே சே என் எழுத்துக்கு மரியதை போய்விட்டதோ?) உனக்கு ஆங்கிலம் தெரியுமா என ஆங்கிலத்திலே வினவினார்
நான் மெத்த படித்த மேதாவி ஆனாலும் ஆங்கிலத்தை-(நம்மை அடிமை செய்து ஆண்டனர் ஆயிற்றே என்ற காரணத்தினாலும்-மருத்துவர் ஐய்யாவின் தமிழ் வாழ வேண்டும் என்றால் ஆங்கிலம் ஒழிய வேண்டும் என்ற கூற்றின் படியும்--மற்றபடி எனக்கு ஆங்கிலம் பேச வராது என தவறாக எண்ண வேண்டாம்-) வெறுத்த காரணத்தினால் பதில் பேசாது அமைதி காத்தேன்.
அவரோ நிலமையை உணர்ந்து நீ பஸ் ஸ்டாண்ட் போகனுமா.இல்லை அதை விலைக்கு வாங்கணுமா,பஸ் ஸ்டாண்ட்போகனும்னால் பஸ் ஸ்டாண்ட் எங்கே என கேட்க வேண்டும்.நீயோ பஸ் ஸ்டாண்ட் எவ்வளவு என் கேட்கிறாய்,உனக்கு ஏன் இந்த பொல்லாப்பு.? வா உன்னை மெட்றாஸ் பஸ்ஸில் ஏற்றி விடுகிறேன் இனிமேல் வெளி மாநிலம் வரனும்னா ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டுவா என் கூறி பஸ்சில் ஏற்றி அங்கிருந்து துரத்தி விட்டார்
நான் கேட்ட கேள்வி..bus stand Eshtu?
நான் கேட்க வேண்டிய கேள்வி..bus stand elli?


No comments:

Post a Comment