மக்கா கன்னுகுட்டி எல்லாம்

மக்கா கன்னுகுட்டி எல்லாம்
ஃப்ளாக் போட்டால் தமிழ் என்னாகும்?

Saturday, October 15, 2011

பஸ் ஸ்டாண்ட் எவ்வளவு..?

ஐயோ சும்மா சும்மா மிரட்றாங்லே.தாங்க முடியல அப்பு.!!
நான் மெத்த படித்த மேதாவி(மேல்தாவி இல்லை மேதாவிங்க)என்பது உலகம் அறிந்த ஒன்று.
ஒரு சமயம் நான் வேலை பார்த்த (ஆமாங்க அப்பபப சிலசமயம் வேலை பார்த்ததுண்டு) நிறுவனத்தின் டேமேஜர் என்னை அப்பா உன்னைபோல் உண்மை உழைப்பாளி யாருளர்,(நான்-மேதாவி அல்லவா-இதை வஞச புகழ்ச்சி என் அறியவில்லை-டேமேஜர்கள் அனைவரும் அப்படித்தான் பேசுவர் போலும்)நீ பேங்கலூர் /மைஸூர் சென்று இந்த வேலையை முடித்துவா என {என் ஸூபர்வைஸர் வேண்டாம் இந்த விபரீதம் -இருகிறதயும் கெடுத்து வைப்பான் என் தடுத்தும்} அதையும் மீறீஏவினார்.
நானும் பேங்கலூரை ஒரு வழி பன்னிவிட்டு(ஏன் பன்னிவிட்டாய்,ஆடு/மாடு விடலை என குறுக்கு கேள்வி கேட்க கூடாது)மைசூரை சென்று அங்கும் Hootagalli Ind. estate ஐ ஒரு வழிசெய்து விட்டு திரும்ப மைஸூ ர் பஸ் ஸ்டாண்டை அடைய கன்னடம் தெரிந்த தமிழ் நண்பர் சொற்படி முயற்சி ஸெய்தேன்.{போன வேலை என்னாச்சு என கேட்க கூடாது-அது அடுத்த கதையாக வரும்-கட்டாயம் வரும்-விடுவதாக இல்லை}நான் வ்ழிதடம் விசாரித்த அனைவரும் என்மேல் கோபம் கொண்ட பார்வை ஓன்றை வீசி விட்டு சென்றனர்.
கடைசியாக நண்பரிடம் ஃபோன் போட்டு வழி கேட்டேன்.அவர் தன் கன்னட நண்பர் ஒருவரை அனுப்பினார் .நண்பரின் நண்பரும் (இன்னும்உங்களுக்கு தலை சுத்தலயா-சே சே என் எழுத்துக்கு மரியதை போய்விட்டதோ?) உனக்கு ஆங்கிலம் தெரியுமா என ஆங்கிலத்திலே வினவினார்
நான் மெத்த படித்த மேதாவி ஆனாலும் ஆங்கிலத்தை-(நம்மை அடிமை செய்து ஆண்டனர் ஆயிற்றே என்ற காரணத்தினாலும்-மருத்துவர் ஐய்யாவின் தமிழ் வாழ வேண்டும் என்றால் ஆங்கிலம் ஒழிய வேண்டும் என்ற கூற்றின் படியும்--மற்றபடி எனக்கு ஆங்கிலம் பேச வராது என தவறாக எண்ண வேண்டாம்-) வெறுத்த காரணத்தினால் பதில் பேசாது அமைதி காத்தேன்.
அவரோ நிலமையை உணர்ந்து நீ பஸ் ஸ்டாண்ட் போகனுமா.இல்லை அதை விலைக்கு வாங்கணுமா,பஸ் ஸ்டாண்ட்போகனும்னால் பஸ் ஸ்டாண்ட் எங்கே என கேட்க வேண்டும்.நீயோ பஸ் ஸ்டாண்ட் எவ்வளவு என் கேட்கிறாய்,உனக்கு ஏன் இந்த பொல்லாப்பு.? வா உன்னை மெட்றாஸ் பஸ்ஸில் ஏற்றி விடுகிறேன் இனிமேல் வெளி மாநிலம் வரனும்னா ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டுவா என் கூறி பஸ்சில் ஏற்றி அங்கிருந்து துரத்தி விட்டார்
நான் கேட்ட கேள்வி..bus stand Eshtu?
நான் கேட்க வேண்டிய கேள்வி..bus stand elli?


வேலையில் சேர்ந்து- அஸடு வழிதல்

நான் நினைத்த Dinesh Trehan
-நான் பார்தத Dinesh Trehan-(ஃபோடோ ஸும்மா ஒப்புமைககாக-வெரொன்றும் இல்லை-ஹிஹி ஹி)
வேலையில் சேர்ந்து- அஸடு வழிதல்(வேரென்ன நமக்கு தெரியும்)..!!
என் வாழ்க்கயின் ஒருமித்த குறிக்கோலாக அரசு பணியில் அமர்வது {வேரெங்காவது பணியில் சேர்ந்தால் வேலை செய் செய், என சுளுக்கு தட்டுவார்கள் ஆனால் அரசு அவ்வாறு செய்யாது-இடமாற்றம் மட்டுமே செய்யும்-மற்றும் அரஸு பணி-நிரந்தரமனா ஒன்று --வேலை செய்யாவிட்டலும் தூக்க மட்டார்கள்-என்பதாலும்) ஒன்றயே லட்சியமாக கொண்டு நான் படித்த-என்ன M.A.B.F தான்- படிப்புக்கு எற்ற-வேலை தேடி திரிந்த காலயில் எல்லா மாநிலதிலும் விண்ணப்பம் செய்திரிதேன்,
ஓரு நல்ல நாளில் எனக்கு டில்லியில் வேலை கிடைதுவிட்டது-(எப்படி என்று கேட்க கூடாது) என் அன்னை ஒரு நல்ல நாள் பார்த்து போய்வா என்று ஊட்டை விட்டு துரத்திவிட்டார்.
நானும் ஒரு வழியாக பணியில் அமர்ந்தேன். நான் மெத்தபடித்தவன் அல்லவா என் வேலை என்ன என்று புரிய 3மாதம் ஆனது.ஒரு நாள் என் மேலதிகாரி-வலைப்பூ பஷையில் டேமேஜர்-அழைத்து பேடெ-(பேடெ என்றால் மகனே என தமிழில் பொருள் கொள்க)சண்டிகர் ஆஃபிஸ்க்கு Dinesh Trehan-இடம் போய் பலான பலான் கேஸ் டிஸ்கஸ் செய்து வா என்றார்.
நானும் சண்டிகர் போய் ஆஃபிஸில் Dinesh Trehan ஐ-அவர் ஒரு பெரிய மீசை வைத்த ஸர்தார்ஜி ஆக இருப்பார் என்று நினைத்து - தேடி அலைந்தேன்.யாரும் அப்பெயரில் இல்லை என்றனர். பின் அப்பெயரை கொண்ட ஒரு அழகிய பெண் வந்து நான் தான் Dinesh Trehan என்றார்.அஸ்டு வழிந்தபடி(இது நமக்கு ஒன்றும் புதிய விச்யமில்லைதான் )கேஸ் டிஸ்கஸ் செய்து வென்று வந்தேன்(எதை என்று வினவாதீர்)
--(ஃபோடோ ஸும்மா ஒப்புமைககாக-டீ.வீ நடிகை என்று சொல்ல வேண்டாம்-ஹிஹி ஹி)

நானும் ஃபிகரும்

ஒரு நல்ல ஃபிகரை பார்த்து ரொம்ப நாள் ஆகிறபடியாலே, சரி என்று நண்பரை உடன் அழைத்து செல்லலாம்(அப்போதான் உதை பட்டாலும் ஒழுங்காக் ஊடு போய் சேர முடியும் என்ற நல்லெண்ணபடி) என்று அவரை சந்திக்க செண்ட்றேன். ஃபிகர் தானே பார்கணும் வா நான் உனக்கு காட்டுகிறேன் என்று உரக்க கத்தினார்.
ஊட்ல அவர் மனைவியாகிய, என் அண்ணியார் என்ன சொல்வார்களோ என்று பயந்தபடி மெல்லமாக் பேச சொன்னேன்.நண்பரோ பயபுள்ள அண்ணி, உன் கொய்ந்தனுக்கு ஃபிகர் காட்டிட்டு வரேன்னு போட்டு கொடுத்துவிட்டார்.அண்ணியாரோ நல்ல ஃபிகரா அவருக்கு காட்டிசேர்த்து வச்சிட்டு வாஙக என வாழ்த்தி அனுபினார்.நண்பரை நம்பி அவருடன் போனால்
நண்பர் காட்டிய ஃபிகரை பார்த்து விட்டு, மக்கா இனிமேல் நீயும் வேண்டாம்,உன் சகவாசமும் வேண்டாம், இனி எனக்கு ஃபோன் பன்னினால் தொலைச்சிபுடுவேன் என் எச்சரித்து விட்டு என் ரூமுக்கு விரைந்தேன்.
நான் நினைத்த ஃபிகர்.

நண்பர் காட்டிய ஃபிகர்
PS..இது வலைபதிவில்  என் முதல் முயற்சி.